மும்பை– டாடாநகர் இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரெயில் சேவை இன்று அறிமுகம் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தொடங்கி வைக்கிறார்

மும்பை– ஜார்கண்ட் இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரெயில் சேவை இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இதை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தொடங்கி வைக்கிறார். அந்தியோதயா ரெயில் நாட்டில் பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள வழித்தடங்களில் ஏழை, எளியவர்களின் வசதிக்காக முன

Update: 2017-03-17 22:16 GMT

மும்பை,

மும்பை– டாடாநகர் இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரெயில் சேவை இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இதை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தொடங்கி வைக்கிறார்.

அந்தியோதயா ரெயில்

நாட்டில் பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள வழித்தடங்களில் ஏழை, எளியவர்களின் வசதிக்காக முன்பதிவு இல்லாத தொலைதூர அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி மும்பை குர்லா டெர்மினஸ்– ஜார்கண்ட் மாநிலம் டாடாநகர் இடையே அந்தியோதயா ரெயில்கள் வாரம் இருமுறை இயக்கப்பட உள்ளன. அந்தியோதயா ரெயில் பெட்டிகள் சென்னை ஒருங்கிணைந்த ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன.

பணிகள் முடிந்து அந்தியோதயா ரெயில் அண்மையில் மும்பை வந்து சேர்ந்தது. 22 பெட்டிகள் கொண்ட அந்த ரெயில் மும்பை குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இன்று அறிமுகம்

இந்த ரெயில் இன்று(சனிக்கிழமை) முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்தியோதயா ரெயில் சேவையை தொடங்கி வைப்பதற்கான விழா மும்பை குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் பிற்பகல் 2.45 மணிக்கு நடக்கிறது. அந்தியோதயா ரெயில் சேவையை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

மேலும் குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள மெக்கானிக் பவர் லாண்டரி, சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் சூரிய மின்சக்தி அமைப்பு, சோலாப்பூர், குல்பர்கா, சூரத், இந்தூர், ராஜ்கோட் ஆகிய ரெயில் நிலையங்களில் வை–பை வசதி ஆகியவற்றையும் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் புறநகர் மின்சார ரெயில் தயாரிப்பதற்கான பணி, புசவல்– ஜல்காவ் இடையே 4–வது வழித்தடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுதல் ஆகியவற்றை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார்.

இந்த தகவல் மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்