காட்கோபர் காமராஜ் நகரில் 284 சட்டவிரோத குடிசைகள் அகற்றம்

காட்கோபர் காமராஜ் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 284 குடிசை வீடுகளை மாநகராட்சியினர் இடித்து தள்ளினர்.

Update: 2017-03-17 22:45 GMT

மும்பை,

காட்கோபர் காமராஜ் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 284 குடிசை வீடுகளை மாநகராட்சியினர் இடித்து தள்ளினர்.

சட்டவிரோத குடிசைகள்

மும்பை காட்கோபர் கிழக்கில் காமராஜ் நகர் குடிசை பகுதி உள்ளது. இந்த குடிசை பகுதியையொட்டி உள்ள பெரிய சாக்கடை அருகே சட்டவிரோதமாக பலர் குடிசை வீடுகளை கட்டி வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் இந்த குடிசை வீடுகளை அகற்றக்கோரி மாநகராட்சி அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து அந்த குடிசை வீடுகளை இடித்து தள்ள மாநகராட்சி துணை கமி‌ஷனர் நரேந்திர பார்டே நடவடிக்கை மேற்கொண்டார்.

இடித்து அகற்றம்

நேற்று அவரது உத்தரவின்பேரில் அந்த குடிசை வீடுகளை இடித்து அகற்றும் பணி நடந்தது. முன்னதாக குடிசை வீடுகளில் வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டு பொக்லைன் எந்திரங்கள் குடிசை வீடுகளை இடித்து தள்ளின. இந்த பணியில் மாநகராட்சி மற்றும் புறநகர் மும்பை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மொத்தம் அங்கிருந்த 284 குடிசை வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. பாதுகாப்பு பணியில் பந்த்நகர் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்