கோவை அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டம்

சென்னை அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து, கோவை அரசு ஆஸ்பத்திரி பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர்.

Update: 2017-03-17 22:15 GMT

கோவை,

சென்னை அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து, கோவை அரசு ஆஸ்பத்திரி பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது டாக்டர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், டாக்டர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதில் 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் போராட்டத்தில் கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்