கிராம சந்தைகளை சரியாக நடத்த குழுக்கள் அமைக்கப்படும் மேல்–சபையில் மந்திரி எச்.கே.பட்டீல் தகவல்
கர்நாடக மேல்–சபையில் நேற்று பா.ஜனதா உறுப்பினர் பானுபிரகாஷ் கேட்ட கேள்விக்கு கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி எச்.கே.பட்டீல் பதில் அளிக்கையில் கூறியதாவது:–
பெங்களூரு,
கர்நாடக மேல்–சபையில் நேற்று பா.ஜனதா உறுப்பினர் பானுபிரகாஷ் கேட்ட கேள்விக்கு கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி எச்.கே.பட்டீல் பதில் அளிக்கையில் கூறியதாவது:–
கர்நாடகத்தில் 45 கிராம பஞ்சாயத்துகளில் கிராம சந்தைகள் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிராம சந்தைகளை சரியாக நடத்தும் நோக்கத்தில் மாவட்ட, தாலுகா, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்படும். இந்த சந்தைகளுக்கு தேவையான நிதி உதவியை மாநில அரசு வழங்குகிறது.
கிராம பஞ்சாயத்துகளில் இத்தகைய சந்தைகளை தொடங்க ஏற்கனவே சந்தை நடைபெற்று இருக்க வேண்டும், தேவையான இடம் இருக்க வேண்டும், போக்குவரத்துக்கு தொந்தரவு ஏற்படாத பகுதியில் சந்தையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எச்.கே.பட்டீல் கூறினார்.