இறைச்சி உணவு ஏற்படுத்திய பிரச்சினை இரும்பு கம்பியால் தாக்கியதில் படுகாயம் அடைந்தவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் பொன்சிங் (வயது 40). பிளக்ஸ் போர்டு அச்சு செய்யும் தொழில் செய்து வருகிறார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் பொன்சிங் (வயது 40). பிளக்ஸ் போர்டு அச்சு செய்யும் தொழில் செய்து வருகிறார். அவருடைய நண்பர் சீனிவாச ராகவன். இவர் சம்பவத்தன்று, தூத்துக்குடியை சேர்ந்த ஜான் வெஸ்சி என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் இருந்து புரோட்டாவும், புறா இறைச்சி உணவும் பார்சல் வாங்கி வந்துள்ளார். பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் புறா இறைச்சியில் கோழி இறைச்சி உணவும் கலந்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாச ராகவன், அந்த இறைச்சியையும் கடையின் பெயரையும் செல்போனில் படம் பிடித்து, கலப்பட இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியிட்டாராம். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜான் வெஸ்சி, தூத்துக்குடி சந்தை ரோட்டில் வைத்து, பொன்சிங்கிடம் சீனிவாச ராகவன் பற்றி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஜான் வெஸ்சி மற்றும் பிரேம், பழனி, பிரவின் ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பி மற்றும் கம்பால் பொன்சிங்கை தாக்கியதாக தெரியவருகிறது. இதில் படுகாயம் அடைந்த பொன்சிங் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் இந்த தாக்குதலின் போது, பொன்சிங்கின் தங்கச்சங்கிலி மற்றும் செல்போன் மாயமானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி ஜான் வெஸ்சி, பிரேம், பழனி, பிரவின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.