எடப்பாடியில் கடைகளில் திடீர் சோதனை: ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கலப்பட பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

எடப்பாடி பகுதியில் உள்ள டீக்கடை மற்றும் மளிகை கடைகளில் கலப்பட டீத்தூள்கள்

Update: 2017-03-17 22:45 GMT

எடப்பாடி

எடப்பாடி பகுதியில் உள்ள டீக்கடை மற்றும் மளிகை கடைகளில் கலப்பட டீத்தூள்கள் மற்றும் கலப்பட மளிகை பொருட்கள் காலாவாதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, எடப்பாடி பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், டீக்கடைகள், குளிர்பான கடைகளில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா, அலுவலர்கள் ராஜேந்திரன், பத்மநாபன், குணசேகர் ஆகியோர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கலப்பட டீத்தூள், காலாவதியான குளிர்பானங்கள், கலப்பட மளிகை பொருட்களை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதுபோன்ற கலப்பட பொருட்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்