தக்கலை பஸ் நிலையத்தில் மினி பஸ்களை நிறுத்தி டிரைவர்கள் ‘திடீர்’ போராட்டம்
தக்கலை பஸ் நிலையத்தில் மினி பஸ்களை நிறுத்தி டிரைவர்கள் ‘திடீர்’ போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தக்கலை,
தக்கலையில் இருந்து பூக்கடை, அழகியமண்டபம், குமாரகோவில், மேக்கா மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட இடங்களுக்கு 27 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்றுமுன்தினம் தக்கலை பஸ் நிலையம் அருகே குமாரகோவில் நோக்கி சென்ற மினி பஸ் டிரைவருக்கும், அரசு பஸ் டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து 2 தரப்பினரும் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
டிரைவர்கள் போராட்டம்
இந்தநிலையில் நேற்று காலை 3 ஜீப்களில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தக்கலை பஸ் நிலையம் வந்தனர். அப்போது, 3 மினி பஸ்கள் மட்டுமே தக்கலை பஸ்நிலையத்திற்குள் வர அனுமதி உண்டு என்று தெரிவித்தனர். மேலும் மற்ற மினி பஸ்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மினி பஸ் டிரைவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, டிரைவர்கள் மினி பஸ்களை எடுத்துக் கொண்டு பஸ் நிலையத்துக்குள் சென்றனர். அங்கு பஸ்களை நிறுத்தி ‘திடீர்’ போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், சப்–இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மினி பஸ் டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரபரப்பு
மினி பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்துக்குள் நிறுத்தப்பட்டதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பேச்சு வார்த்தையில், மினி பஸ்கள் தற்காலிகமாக நிறுத்த மாற்று இடம் ஏற்பாடு செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மினி பஸ் டிரைவர்கள் பஸ் நிலையத்தில் இருந்து மினி பஸ்களை எடுத்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.