வைக்கோல் ஏற்றிச் சென்ற மினிலாரி தீப்பிடித்து எரிந்தது

தாழக்குடியில் வைக்கோல் ஏற்றிச் சென்ற மினிலாரி தீப்பிடித்து எரிந்தது

Update: 2017-03-16 22:30 GMT
ஆரல்வாய்மொழி,

தாழக்குடியில் இருந்து வைக்கோல் ஏற்றி கொண்டு மினிலாரி ஒன்று சித்திரங்கோடு நோக்கி சென்றது. புறப்பட்ட சில நிமிடங்களில் தாழக்குடி நாச்சியார் புதுக்குளம் அருகே வந்த போது திடீரென வைக்கோல் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. உடனே டிரைவர் மினிலாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் வைக்கோல் முழுவதும் எரிந்து நாசமானது. மினிலாரியின் பெரும்பகுதி கருகி சேதமடைந்தது. வைக்கோலில் மின்கம்பி உரசியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்