ஜாமீனில் வெளியே வந்த தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை மகன் கைது
திருவாரூரில், கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய மகனை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் திலகர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது54). தொழிலாளி. இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி விவகாரத்து வாங்கிவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். 2-வது மனைவி செல்வி. இவருக்கு கமலக்கண்ணன்(28), செல்வகுமார்(26) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். செல்வி இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து செல்வராஜ், 3-வதாக கலா என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்தார். கடந்த ஆண்டு நடந்த குடும்ப தகராறில் செல்வராஜ் தனது மகன் செல்வகுமாரை கல்லால் அடித்துக் கொலை செய்தார். இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட செல்வராஜ், பின்னர் ஜாமீனில் வெளியே வந்து விட்டார். இந்த நிலையில் 3-வது மனைவி கலாவுடன் தகராறு ஏற்பட்டதால் அவர், புத்தூரில் உள்ள கலாவின் அண்ணன் மாசிலாமணி என்பவருடைய வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் செல்வராஜை பார்ப்பதற்காக அவருடைய மகன் கமலக்கண்ணன் நேற்றுமுன்தினம் இரவு புத்தூருக்கு சென்றார். அப்போது தந்தை-மகன் இடையே தகராறு ஏற்பட்டது.
கல்லால் அடித்தார்
இதனால் ஆத்திரம் அடைந்த கமலக்கண்ணன், செல்வராஜின் தலையில் கல்லால் அடித்தார். இதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார். பின்னர் கமலக்கண்ணன் வைப்பூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து, நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர். இந்த சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.