ஆர்.கே.நகரில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு மேலும் ஒரு கட்சி – அமைப்பு ஆதரவு
புரட்சிபாரதம் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தனர்.
சென்னை,
தமிழ்நாடு இஸ்லாமிய ஜமா அத் மாநில தலைவர் எப்.பி.அப்துல் நாசர் தலைமையில் நிர்வாகிகள் 15 பேர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தனர். அப்போது அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் உடன் இருந்தார்.
இதேபோல புரட்சிபாரதம் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தனர்.
அ.தி.மு.க. வரலாற்றினை பற்றியும், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா பற்றியும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை பற்றியும் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைத்தலைவர் எம். திலக் எழுதிய அம்மா ஓர் சகாப்தம் அ.தி.மு.க. வரலாற்று சாதனை பதிவுகள் என்ற புத்தகத்தை டி.டி.வி.தினகரன் வெளியிட்டார்.