பெண்களை இழிவுபடுத்தியதாக டிராபிக் ராமசாமி மீது கமிஷனரிடம் புகார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போலீஸ் கமிஷனரை சந்தித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மீது புகார் அளித்தனர்.
சென்னை,
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் சென்னை வேப்பேரி போலீஸ் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புறப்பட்டனர். வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர், அந்த அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மட்டும் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேரில் சந்தித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மீது புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
‘எங்கள் அமைப்பைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ‘யு–டியூப்பில்’ கருத்துகளை பதிவு செய்துள்ளார். இதைப் பார்த்து நாங்கள் கடும் அதிர்ச்சி அடைந்தோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்’
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.