அரக்கோணத்தில் தென்னக ரெயில்வே மஸ்தூர் யூனியன் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

அரக்கோணத்தில் தென்னக ரெயில்வே மஸ்தூர் யூனியன் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2017-03-16 20:30 GMT

அரக்கோணம்,

அரக்கோணம்– சோளிங்கர் சாலையில் உள்ள ரெயில்வே பொறியியல் பணிமனை முன்பாக தென்னக ரெயில்வே மஸ்தூர் யூனியன் அரக்கோணம் கிளை நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். கிளை தலைவர் டி.பிலிப் தலைமை தாங்கினார். உதவி தலைவர் வி.சுந்தரமூர்த்தி, பொருளாளர் சி.என்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி செயலாளர் டி.கே.ஜெகஜீவன்ராஜ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய சங்க பிரதிநிதி பி.செல்வம், கிளை செயலாளர் வி.எஸ்.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ரெயில்வே தொழிற்சங்கங்களில் உரிமைகளை மத்திய அரசு பறிக்க கூடாது, ரெயில்வே துறை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் சம்பளம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் உதவி செயலாளர்கள் ஜெ.தேவேந்திரன், டி.ஞானவேல், பி.ஜெகநாதன், அன்சர்பாஷா, மணி, பாஸ்கரன், தங்கோவாணன், தணிகாசலம் உள்பட இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி செயலாளர் ஜூலிமகிமைதாஸ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்