பர்கூர் அருகே பரிதாபம்: தனியார் கிரானைட் தொழிற்சாலையில் கல் விழுந்து தொழிலாளி பலி வடமாநிலத்தை சேர்ந்தவர்
பர்கூர் அருகே தனியார் கிரானைட் தொழிற்சாலையில் கல் விழுந்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பர்கூர்,
அஸ்சாம் மாநிலத்தை சேர்ந்தவர் சுசீல் சத்ரியா(வயது 23). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஐகொந்தத்தில் உள்ள ஒரு தனியார் கிரானைட் தொழிற்சாலையில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை சுசீல் சத்ரியா வழக்கம் போல வேலையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பெரிய கல் ஒன்று சுசீல் சத்ரியா மீது விழுந்தது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் இது தொடர்பாக பர்கூர் போலீஸ்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணைஅதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சுசீல் சத்ரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.