தர்மபுரி, கிருஷ்ணகிரியில் பா.ஜனதா செயல்வீரர்கள் கூட்டம் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் பா.ஜனதா கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட பா.ஜனதா கட்சி செயல்வீரர்கள் கூட்டம் தர்மபுரி ரோட்டரி அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். நகர தலைவர் சரவணன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:– தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் வளர்ச்சி பெற வேண்டுமானால் தமிழகத்தில் பா.ஜனதா கட்சியின் ஆட்சி மலர வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்றால் பலருக்கு பதற்றம் ஏற்பட்டு விடுகிறது. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணியினரும், விசாரணை வேண்டாம் என்று சசிகலா அணியினரும் கூறுகிறார்கள். தமிழக மக்களுக்கு உள்ள சந்தேகத்தை போக்க விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்.
பாரதமாதா கோவில்
தமிழகத்தில் 3 மாதங்களில் 3 முதல்–அமைச்சர்கள் மாறிவிட்டனர். குடிநீர் பிரச்சினை, ரேஷன் பொருட்கள் பிரச்சினை என மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிர்வாகத்திறன் தற்போதைய அரசுக்கு இல்லை. ரூபெல்லா தடுப்பூசி போடும் திட்டம் பற்றிக்கூட பொதுமக்களுக்கு அரசு முறையாக விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. இந்த நிலை மாற தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி உருவாக வேண்டும். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோவில் அமைக்க நீண்ட காலமாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதை நிறைவேற்ற பா.ஜனதா கட்சி தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், அனந்தகிருஷ்ணன், அழகு, மாவட்ட பொருளாளர் கணேசன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய தலைவர் வெற்றி நன்றி கூறினார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாவட்ட பா.ஜனதா கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழிசை சவுந்தராஜன் கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் முனிராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் கோட்டீஸ்வரன், கட்சி பொறுப்பாளர்கள் பிரேம்நாத், மாநில இளைஞர் அணி செயலாளர் நாகராஜ், ஓசூர் நகர தலைவர் சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.