ஊதிய மாற்றம் செய்யக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊதிய மாற்றம் செய்யக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-15 23:00 GMT

விழுப்புரம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் ரத்தினம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பார்த்திபன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மாநில தணிக்கையாளர் பாலு, மாநில செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 8–வது ஊதிய மாற்ற குழுவை உடனே அமைத்து ஊதிய மாற்றம் செய்ய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் சரவணன், செல்வம், இணை செயலாளர்கள் தேசிங்கு, ஆனந்தகிருஷ்ணன், சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ரவி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்