குழந்தைகள் திருடுபோவதை தடுக்க வார்டில் ‘பயோ–மெட்ரிக்’ தானியங்கி கதவு
குழந்தைகள் கண்காணிப்பு வார்டில் ‘பயோ–மெட்ரிக்’ தானியங்கி கதவை சோதனை முறையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி செயல்படுத்தி உள்ளது.
சென்னை,
குழந்தைகள் திருடுபோவதை முற்றிலுமாக தடுக்க கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி பச்சிளம் குழந்தைகள் கண்காணிப்பு வார்டில் ‘பயோ–மெட்ரிக்’ தானியங்கி கதவை சோதனை முறையில் செயல்படுத்தி உள்ளது.
குழந்தைகள் திருட்டு
தமிழகத்தில் 30 சதவீத பெண்கள் பிரசவத்துக்காக அரசு ஆஸ்பத்திரிகளையே நாடுகிறார்கள். ஆனால் அரசு ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பு குறைபாடு, கூட்ட நெரிசல் ஆகியவற்றை பயன்படுத்தி பச்சிளம் குழந்தைகளை திருடும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளும் திருடுபோயுள்ளன.
இதில் ஆஸ்பத்திரிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா உதவியுடன் பெரும்பாலான குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளன. சில சம்பவங்களில் திருடுபோன குழந்தைகளின் நிலைமை என்ன ஆனதென்றே தெரியவில்லை. கடந்த மாதம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு குழந்தையை சம்பந்தமில்லாத பெண் திருடிச் சென்றுவிட்டார். கண்காணிப்பு கேமரா இல்லாததால் அந்த பெண்ணை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
‘பயோ–மெட்ரிக்’
தானியங்கி கதவு
ஆஸ்பத்திரியில் குழந்தைகள் திருட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நவீன திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள பிரசவ வார்டில் பிறக்கும் எடை குறைவான, ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் அருகில் உள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் ‘இன்குபேட்டரில்’ வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பிரிவில் ‘பயோ–மெட்ரிக்’ தானியங்கி கதவு சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கதவுக்கு அருகில் ‘பயோ–மெட்ரிக் டேட்டா மெஷின்’ சுவரில் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த கருவியில் குழந்தையின் தாய் மற்றும் அவர் குறிப்பிடும் ஒருவர், சிகிச்சை பிரிவில் உள்ள டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோரின் கைரேகை மற்றும் புகைப்பட விவரங்கள் பதிவு செய்யப்பட்டுவிடும்.
கைரேகை, முகப்பதிவு
சம்பந்தப்பட்டவர்கள் அந்த எந்திரத்தில் கைரேகை வைத்தாலோ அல்லது முகத்தை காண்பித்தாலோ தான் கதவு திறக்கும். உரிய கைரேகை இல்லாவிட்டாலோ, வேறு முகம் தெரிந்தாலோ கதவு திறக்காது. இதுதவிர டாக்டர்கள், செவிலியர்களிடம் ‘டேட்டா கார்டு’ வழங்கப்பட்டு உள்ளது. அவசர நேரத்தில் இந்த கார்டுகளை காண்பித்தும் அவர்கள் கதவை திறக்கலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சம்பந்தமில்லாதவரின் கைரேகை பதிவானால் ‘அலாரம்’ அடித்துவிடும். குழந்தை ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படும்போது அந்த குழந்தையின் விவரங்கள், பெற்றோரின் பதிவுகள் அந்த ‘பயோ–மெட்ரிக்’ கருவியில் இருந்து அழிக்கப்பட்டுவிடும். அந்த பெற்றோர் மீண்டும் தேவையில்லாமல் உள்ளே வரமுடியாது. இந்த சிகிச்சை பிரிவில் 10 கண்காணிப்பு கேமராக்கள் உள்பட ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் 70–க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.
முற்றிலும் தடுக்கப்படும்
இந்த சிகிச்சை வார்டில் பொறுப்பாளராக டாக்டர் சுப்பிரமணியும், டாக்டர்கள் தேவி மீனாள், விவேகானந்தன், 16 செவிலியர்கள், 10 கண்காணிப்பாளர்களும் உள்ளனர். இந்த சிகிச்சை பிரிவின் செயல்பாடுகளை ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் ஆர்.நாராயணபாபு கவனித்து வருகிறார்.
கடந்த 20 நாட்களுக்கும் மேல் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த நவீன திட்டம், இன்னும் கூடுதல் அம்சங்களுடன் அடுத்த 3 மாதங்களில் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் இனி குழந்தைகள் திருட்டு முற்றிலுமாக தடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த ‘பயோ–மெட்ரிக்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
மற்றொரு திட்டம்
இதுதவிர இங்கு ‘ரேடியோ பிரீக்வென்சி ஐடென்டிபிகேஷன் டிவைசஸ்’ (ஆர்.எப்.ஐ.டி) எனும் மற்றொரு நவீன திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. அதில் குழந்தை மற்றும் தாய் கைகளில் ஆர்.எப்.ஐ.டி. டேக் ஒட்டப்படும். இதில் உள்ள அதிர்வெண்கள் பிரசவ வார்டு கட்டுப்பாட்டு அறையில் உள்ள கருவியுடன் தொடர்பில் இருக்கும்.
குழந்தையும், தாயும் ஆஸ்பத்திரி வளாகத்தில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சேர்ந்து செல்லலாம். ஆனால் குழந்தைக்கும், தாய்க்கும் 20 மீட்டர் இடைவெளி ஏற்பட்டால் கட்டுப்பாட்டு அறையில் ‘அலாரம்’ அடிக்கும். உடனே சம்பந்தப்பட்ட குழந்தையின் உறவினர்களுக்கும், போலீசுக் கும் தகவல் தெரிவிக்கப்படும்.
இதற்கான ஆர்.எப்.ஐ.டி. டேக்குகளை அண்ணா பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சித்துறை வழங்குகிறது. இந்த திட்டம் ஏற்கனவே மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.