‘கமல்ஹாசனுக்கு பிரச்சினை என்றால் நடிகர் சங்கம் துணை நிற்கும்’

‘கமல்ஹாசனுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நடிகர் சங்கம் துணை நிற்கும்‘ என்று சேலத்தில் நடிகர் விஷால் கூறினார். நடிகர் விஷால் பேட்டி திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி போட்டியிடுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை சேலம் வந்த நட

Update: 2017-03-15 22:45 GMT

சேலம்,

‘கமல்ஹாசனுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நடிகர் சங்கம் துணை நிற்கும்‘ என்று சேலத்தில் நடிகர் விஷால் கூறினார்.

நடிகர் விஷால் பேட்டி

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி போட்டியிடுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை சேலம் வந்த நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 2–ந் தேதி நடக்கிறது. இதில் ‘நம்ம அணி’ என்ற பெயரில் நான் உள்பட 27 பேர் போட்டியிடுகிறோம். நான் தயாரிப்பாளர்களை வாக்குக்காக மட்டும் சந்தித்து வருவதில்லை. எங்களுடைய நோக்கங்கள் குறித்து சொல்வதற்காகவே சந்தித்து வருகிறோம்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று பின்னர், அறிவித்த திட்டங்களை ஓராண்டிற்குள் நிறைவேற்றவில்லை எனில் நாங்கள் கண்டிப்பாக அனைவரும் ராஜினாமா செய்வோம். தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒரே இடத்தில் அனைத்து தப்புகளும் நடைபெறுகிறது. மேலும் அங்கு எப்போதும் கட்டப்பஞ்சாயத்து தான் அதிகளவு நடக்கிறது.

நடிகர் சங்கம் துணை நிற்கும்

இதை சுத்தம் செய்வதற்காக தான் நாங்கள் போட்டியிடுகிறோம். பல்வேறு பிரச்சினைகளால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைகின்றனர். பலர் படம் எடுக்க தயங்குகின்றனர். திருட்டு வி.சி.டி.க்களை முற்றிலும் ஒழிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தினரால் மட்டுமே முடியும். மூத்த கலைஞரான கமல்ஹாசனுக்கு அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறுவதற்கு சுதந்திரம் உண்டு. மேலும் இது அவருடைய தனிப்பட்ட கருத்து ஆகும்.

இதுதொடர்பாக தமிழக முதல்–அமைச்சரும் பதில் கூறி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் எங்களுடைய வழிகாட்டி என்பதால் அவருக்கு உறுதுணையாக இருப்போம். மேலும் கமல்ஹாசனுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நடிகர் சங்கம் துணை நிற்போம்.

வெற்றி வாய்ப்பு

நடிகைகளின் புகைப்படங்களை வக்ரபுத்தி உள்ளவர்கள் சிலர் மார்பிங் செய்து வெளியிடுகின்றனர். தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் எங்களுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இயக்குனர் சேரன் எங்களை பற்றி தரக்குறைவாக பேசுவதற்காக, நாங்களும் அவரை தரக்குறைவாக பேச விரும்பவில்லை. இவ்வாறு நடிகர் விஷால் கூறினார். பேட்டியின் போது இயக்குனர் மிஷ்கின், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர் உதயா உள்பட பலர் அருகில் இருந்தனர்.

மேலும் செய்திகள்