ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகை: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று சென்னைக்கு வந்தார்.

Update: 2017-03-03 22:13 GMT
சென்னை,

சென்னையில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று சென்னைக்கு வந்தார். நேற்று காலையில் தாம்பரம் விமானப்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், அடையாறில் நடந்த மற்றொரு நிகழ்ச்சிக்கு சென்றார்.

சென்னையில் அவர் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட முக்கிய பிரதான சாலைகளில் பயணித்தார். எனவே பாதுகாப்பு கருதி அருகில் உள்ள இணைப்புச் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்தை போலீசார் நிறுத்திவிட்டனர்.

அவர் பயணித்து சென்ற பிறகு இணைப்புச் சாலைகளில் வாகனங்களை போகவிட்டனர். எனவே பிரதான சாலைகளில் வாகனங்கள் ஒரே நேரத்தில் குவிந்துவிட்டன. இதனால் பல கிலோமீட்டர் நீளத்துக்கு வாகன நெரிசல் காணப்பட்டது. இது சென்னையின் வேறிடங்களிலும் எதிரொலித்தது.

சென்னையில் இருந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி செல்லும் வரை போக்குவரத்து நெரிசல் தொடர்ந்தது. 

மேலும் செய்திகள்