குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
குண்டடம்,
குண்டடம் ஒன்றியம் கொக்கம்பாளையம் ஊராட்சி வளையம்புத்தூரில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் போர்வெல் மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரமாக போர்வெல் மற்றும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிக்க தண்ணீர் இன்றி அவதிப்பட்டனர். இதையடுத்து குடிநீர் கேட்டு அப்பகுதிக்கு பெண்கள் காலிக்குடங்களுடன் குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து குண்டடம் ஒன்றிய ஆணையாளர் அய்யாசாமி, முற்றுகையில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆழ்குழாய் கிணறுகளை உடனடியாக மறுசீரமைப்பு செய்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.