மாவட்டம் முழுவதும் நடந்த வறட்சி நிவாரண கணக்கெடுப்பு குறித்த ஆய்வு கூட்டம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது.

Update: 2017-03-03 21:30 GMT

வேலூர்,

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வறட்சி பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் குழு சார்பில் கணக்கெடுக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறை மற்றும் தற்போதைய வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண உதவித்தொகை கணக்கெடுப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

மாநில திட்டக்குழு உறுப்பினர் மற்றும் செயலாளர் அனில்ரமேஷ்ராம் தலைமையில் நடந்த இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் எஸ்.ஏ.ராமன், உதவி கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்புலட்சுமி, மாநகராட்சி ஆணையாளர் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்