புத்தூர் நால்ரோட்டில் ‘நானோ சிக்னல்’ செயல்பாட்டுக்கு வந்தது

திருச்சி,
திருச்சி புத்தூர் நால்ரோட்டில் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய ‘நானோ சிக்னல்’ அமைக்கும் பணியானது சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் மூலம் ரூ.10 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை முதல் சிக்னல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த சிக்னலின் மூலம் ஒரே நேரத்தில் நான்கு புறமும் எரியும் விளக்குகளில் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கும் வகையில் வினாடி விவரம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சாலை போக்குவரத்து விதிகளை கடை பிடிக்கவேண்டியதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு வாசகங்களும் அவ்வப்போது வந்து செல்லும். 24 மணி நேரமும் தானியங்கி முறையில் செயல்படக்கூடிய இந்த நானோ சிக்னலின் கட்டுப்பாட்டு அறை சென்னையில் தான் உள்ளது. சென்னையில் இருந்தபடியே இது இயக்கப்பட்டு வருகிறது. இதே போன்ற நானோ சிக்னல்கள் சிந்தாமணி அண்ணாசிலை, கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா ஆகிய இடங் களிலும் அடுத்த கட்டமாக அமைக்கப்பட உள்ளது.