எல்.இ.டி. டி.வி.க்கள், ஏ.சி. எந்திரங்கள் வாங்கி மோசடி செய்த 3 பேர் கைது
புதுவை கடைகளில் போலியான வரைவோலைகளை கொடுத்து எல்.இ.டி. டி.வி.க்கள், ஏ.சி. எந்திரங்களை மோசடி செய்த சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி,
புதுவை காமராஜர் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் 10 எல்.இ.டி. டி.வி.க்களை வாங்கி அதற்கு டிப்-டாப் ஆசாமி ஒருவர் வரைவோலையை (டி.டி.) கொடுத்து விட்டுச் சென்றார். அந்த வரைவோலையை வங்கியில் செலுத்தியபோது அது போலியானது என்பது தெரியவந்தது.
இதேபோல் ரெட்டியார்பாளையத்தில் உள்ள நிறுவனத்திலும் போலி வரைவோலை கொடுத்து எல்.இ.டி. டி.வி.க்கள், மரச்சாமான்களை வாங்கிச் சென்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல் புதுவை வெங்கட்டா நகரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கல்வி நிறுவனம் நடத்தப்போவதாக கூறி வாடகைக்கு பேசி சாவியை வாங்கி அங்கு இருந்த 14 ஏ.சி. எந்திரங்கள், மேஜைகளை திருடிச் சென்றனர்.
சி.சி.டி.வி. காட்சிகள்
இதுகுறித்து பெரியகடை, ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவங்களில் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் அடுத்தடுத்து கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சம்பந்தப்பட்ட கடைகளில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர்.
இதில் இருந்த காட்சிகளை வைத்து மோசடி கும்பல் பற்றிய விவரத்தை அடையாளம் கண்டுபிடித்தனர். இதுமட்டுமின்றி செல்போன் எண் உபயோகத்தை வைத்தும் அந்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
விசாரணையில் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது சென்னையை சேர்ந்த நபர்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி போலீசார் சென்னை சென்று அந்த நபர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
3 பேர் கைது
பிடிபட்ட அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், அவர்கள் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சையது ஜாபர் (வயது 47), திருவள்ளூரை சேர்ந்த முனிர் அகமது (33), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரூபேஷ் ஜலீல் (42) என்பது தெரியவந்தது. அவர்களை கைதுசெய்த போலீசார் 20 டி.வி.க்கள் மற்றும் ஏ.சி. எந்திரங்கள் உள்பட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
குற்றவாளிகளை கைது செய்த போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி, இன்ஸ்பெக்டர் ஜிந்தா கோதண்டராமன், சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் பாராட்டினார்.