ஊழல் குற்றச்சாட்டு நிரூபணம் ஆவதால் இரும்பு மேம்பால திட்டத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது எடியூரப்பா பேட்டி
ஊழல் குற்றச்சாட்டு நிரூபணம் ஆவதால் இரும்பு மேம்பால திட்டத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளதாக என்று எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
ஊழல் குற்றச்சாட்டு நிரூபணம் ஆவதால் இரும்பு மேம்பால திட்டத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளதாக என்று எடியூரப்பா கூறினார்.
பெங்களூருவில் இரும்பு மேம்பால திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்குபேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சித்தராமையா மீது களங்கம்இரும்பு மேம்பாலம் அமைக்கும் திட்டத்தில் ஊழல் நடந்து இருப்பதாக நாங்கள் குற்றம்சாட்டினோம். அந்த குற்றச்சாட்டு நிரூபணமாவதால் அதற்கு பயந்து இந்த திட்டத்தை மாநில அரசு ரத்து செய்து உள்ளது. இந்த திட்டத்தை ரத்து செய்தால் மட்டும் போதாது. இந்த திட்டத்தில் சித்தராமையா மீது களங்கம் ஏற்பட்டு உள்ளது.
அதனால் இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்றால் ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமாவது உறுதி. இந்த திட்டத்தை கைவிடுவதால் ஊழல் விவகாரம் முடிந்துவிடாது. இரும்பு மேம்பால திட்டம் மட்டுமின்றி சில மந்திரிகள் காங்கிரஸ் மேலிடத்துக்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை கொடுத்துள்ளனர். இதுபற்றி விசாரணை நடைபெற வேண்டும்.
பல்வேறு முறைகேடுகள்படித்தவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் இரும்பு மேம்பால திட்டம் வேண்டாம் என்று சொன்னார்கள். அப்போதெல்லாம் மாநில அரசு அதை ஏற்கவில்லை. ஆனால் தற்போது ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க மாநில அரசு அந்த திட்டத்தை கைவிட்டுள்ளது. இந்த அரசின் இன்னும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக ஆவணங்களை சேகரித்து வருகிறோம். விரைவில் அவற்றை வெளியிடுவோம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.