பெரும்பாறை பகுதியில் மழை இல்லாததால் மிளகு கொடிகள் கருகின விவசாயிகள் கவலை

பெரும்பாறை பகுதியில் மழை இல்லாததால் மிளகு கொடிகள் கருகி வருகின்றன.

Update: 2017-03-02 23:00 GMT

பெரும்பாறை,

மிளகு சாகுபடி

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, பூலத்தூர், ஆடலூர், பன்றிமலை, சோலைக்காடு, பெரியூர், பாச்சலூர் போன்ற கீழ்மலைப்பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் உள்ளனர்.

இவர்கள் தங்கள் தோட்டங்களில் காபி, மிளகு, ஆரஞ்சு, வாழை, எலுமிச்சை ஆகியவற்றை சாகுபடி செய்து வருன்றனர். தற்போது பெரும்பாறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் மிளகு சீசன் தொடங்கி உள்ளது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை பெய்யாத காரணத்தால் மிளகு கொடிகள் அனைத்தும் கருகி வருகின்றன.

விவசாயிகள் கவலை

மேலும் கொடிகளில் இலைகள் பழுப்பு நிறமாக மாறி காட்சி அளிக்கின்றன. இன்னும் சிலருடைய தோட்டங்களில் மிளகுகள் விளைச்சல் அடையாமல் உதிர்ந்து கொட்டுகின்றன. இதனால் தோட்டங்களில் கொடிகளில் மிளகுகளை பறிப்பதற்கு ஒப்பந்தம் செய்தவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதே போல் அவரை, பீன்ஸ், சவ்சவ் போன்ற பயிர்களும் தண்ணீரில்லாமல் வாடி வருகின்றன. இதன் காரணமாக சாகுபடி செய்த செலவு தொகைகூட கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்