நாகர்கோவில்–கோவை எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரெயிலாக மாற்றம் பயண நேரத்திலும் மாறுதல்

நாகர்கோவில்– கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவிரைவு ரெயிலாக (சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்) மாற்றப்படுகிறது.

Update: 2017-03-02 22:45 GMT

மதுரை,

அதிவிரைவு ரெயில்

நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இரவு 8.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 1 மணிக்கு மதுரைக்கு வருகிறது. மறுநாள் காலை 7 மணிக்கு கோவையை சென்றடைகிறது.

இரு மார்க்கங்களிலும் இந்த ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு, பயண நேரம் குறைக்கப்பட்டு அதிவிரைவு ரெயிலாக மாற்றம் செய்யப்படுகிறது. ரெயிலின் எண்களும் மாற்றப்படுகின்றன.

வருகிற ஜூன் மாதம் 28–ந் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மாற்றத்தின்படி புதிய கால அட்டவணை வருமாறு:–

நாகர்கோவில்–கோவை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22667):–

இரவு 8.30 மணிக்குப்பதில், இரவு 9.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும்.

இரவு 9.59 மணிக்கு வள்ளியூருக்கும், 10.35 மணிக்கு நெல்லைக்கும் வந்தடையும். நெல்லையில் 5 நிமிடம் நிற்கும். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தை வந்தடையும். அங்கு சுமார் 20 நிமிடம் நிற்கும்.

இணைப்பு ரெயில்

(இந்த நேரத்தில் தூத்துக்குடி– கோவை இணைப்பு ரெயில் இந்த ரெயிலுடன் சேர்க்கப்படும்).

புதிய அட்டவணைப்படி, தூத்துக்குடியில் இணைப்பு ரெயில் இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு, 10.39 மணிக்கு மேலூருக்கும், 10.48 மணிக்கு மீளவிட்டானுக்கும், இரவு 11.15 மணிக்கு வாஞ்சி மணியாச்சிக்கும் வந்தடையும்.

இந்த இணைப்பு ரெயில், நாகர்கோவில்– கோவை அதிவிரைவு ரெயிலுடன் இணைப்பட்டதும், மணியாச்சியில் 11.35 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12.04 மணிக்கு கோவில்பட்டிக்கும், 12.24 மணிக்கு சாத்தூருக்கும், 12.53 மணிக்கு விருதுநகருக்கும், நள்ளிரவு 1.40 மணிக்கு மதுரைக்கும் வந்து சேரும்.

மதுரை ரெயில் நிலையத்தில் 1.45 மணிக்கு புறப்பட்டு, 2.55 மணிக்கு திண்டுக்கல்லுக்கும், அதிகாலை 4.08 மணிக்கு கரூருக்கும், 5.15 மணிக்கு ஈரோட்டிற்கும், 5.58 மணிக்கு திருப்பூருக்கு போய்ச்சேரும். காலை 7 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை சென்றடையும்.

கோவை–நாகர்கோவில்

மறுமார்க்கத்தில் இயக்கப்படும் கோவை–நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22668), இரவு 7.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும்.

நள்ளிரவு 12.05 மணி: மதுரை, 12.53: விருதுநகர், 1.19: சாத்தூர், 1.39: கோவில்பட்டி, 2.40 மணி: வாஞ்சிமணியாச்சி.

வாஞ்சி மணியாச்சியில் தூத்துக்குடி இணைப்பு ரெயில் கழற்றி விடப்படும்.

அங்கிருந்து நாகர்கோவில் செல்லும் ரெயில் 2.50 மணிக்குப் புறப்பட்டு, நெல்லையை அதிகாலை 3.15 மணிக்கும், வள்ளியூரை 4.03 மணிக்கும், நாகர்கோவிலை 4.50 மணிக்கும் சென்றடையும்.

மேலும் செய்திகள்