மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்படுவது அ.தி.மு.க. அரசு முத்தையா எம்.எல்.ஏ. பேச்சு
மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்படுவது அ.தி.மு.க. அரசு என்று முத்தையா எம்.எல்.ஏ. பேசினார்.
பரமக்குடி,
பொதுக்கூட்டம்பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட எமனேசுவரத்தில் நகர் ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜெயலலிதா பேரவை நகர் செயலாளர் வடமலையான் தலைமை தாங்கினார். மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் அய்யான் அனைவரையும் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் அப்பாத்துரை, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், இலக்கிய அணி செயலாளர் திலகர், முன்னாள் நகர் செயலாளர் வரதன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் முத்தையா எம்.எல்.ஏ. பேசியதாவது:– அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என விரும்பி மக்கள் வாக்களித்து மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வந்துள்ளனர். மக்களின் நம்பிக்கை வீணாகாத வகையில் இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்தவோ, அசைக்கவோ முடியாது.
அ.தி.மு.க.வில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு சென்ற முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பணத்திற்காக பேரவை தொடங்கியுள்ள தீபா போன்றவர்கள் தொடங்கும் கட்சிகள் மக்களிடம் எடுபடாது. மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்படுவது அ.தி.மு.க. அரசு. அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி ஆட்சியை பிடித்துவிடலாம் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அது பழிக்காது. அ.தி.மு.க.வுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இலவச வேட்டி,சேலைபின்னர் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், போக்குவரத்து கழக மத்திய சங்க இணை செயலாளர் சிங்கார பூபதி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் முத்தரசு, நிலவள வங்கி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர் மாணவரணி துணைத் தலைவர் யோகமணிகண்டன், போகலூர் ஒன்றிய நிர்வாகி ராமமூர்த்தி, ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கார்த்தி, இளைஞர் பாசறை துணை செயலாளர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர் துணை செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.