குளத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்
குளத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
கீரனூர்,
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள குளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு பொதுமக்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். அதன்படி அங்கு நேற்று காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில் வாடிவாசல் அமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை பதம் பார்த்தது.
இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த சுமார் 360-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பரிசு பொருட்கள்
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளிக்காசு, சைக்கிள், பீரோ, கட்டில், குடம், மிக்சி, மின்விசிறி, குக்கர் போன்றவை பரிசு பொருட்களாக வழங்கப்பட்டன. அதேபோல் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டியில் அதிக காளைகளை பிடித்த திருச்சி அருகே உள்ள கொட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுனில் (வயது 25) என்ற வீரருக்கு தங்ககாசு, பீரோ, சைக்கிள், வெள்ளிக்காசு போன்றவைகள் பரிசுகளாக வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, இலுப்பூர் கோட்டாட்சியர் வடிவேல்பிரபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் மற்றும் கீரனூர், குளத்தூர் நார்த்தாமலை, இலுப்பூர் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர். கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்மேத்தா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.