நாகர்கோவிலில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,
கேரளாவில் நடைபெற்று வரும் படுகொலை சம்பவங்களை கண்டித்தும், இந்த கொலை சம்பவங்களுக்கு காரணமாக கம்யூனிஸ்டு கட்சியினர் இருப்பதாக கூறியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் இந்து அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் நேற்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நீதிக்காக குரல் என்ற அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ். மாவட்ட நிர்வாகியும், போராட்ட ஒருங்கிணைப்பாளருமான அமுதன் தலைமை தாங்கி பேசினார். இந்து கோவில் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் நாஞ்சில் ராஜா முன்னிலை வகித்தார். இந்து தர்ம வித்யாபீட மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். பா.ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சோமன், பாரதீய மஸ்தூர் சங்க மாநில பொதுச்செயலாளர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கேரள மாநில இந்து ஐக்கிய வேதி முன்னாள் மாநில செயலாளர் பத்மகுமார் சிறப்புரையாற்றினார். முடிவில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது.