மணிமுத்தாறு பகுதியில் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் வாழைகள் நாசம்
மணிமுத்தாறு அருகே பகுதிகளில் வன விலங்குகளால் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்
அம்பை,
மணிமுத்தாறு அருகே உள்ள ஏர்மாள்புரம், செட்டிமேடு, ஆலடியூர், திருப்பதியாபுரம் போன்ற பகுதிகளில் வன விலங்குகளால் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே பருவமழை இல்லாமல் தண்ணீருக்காக போராடி விதைத்த பயிரை, வாழைகளை காப்பாற்ற சிரமப்பட்டு வரும் இந்த நேரத்தில் மலையடிவாரம் என்பதால் காட்டுப்பன்றி, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளும் பயிர்களை சேதமாக்கி விடுகின்றன. கடந்த 2 நாட்களில் ஆலடியூர், செட்டிமேடு போன்ற பகுதிகளில் காட்டுப்பன்றிகள் குலை தள்ளும் தருவாயில் உள்ள வாழைகளை சேதப்படுத்தியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு தர வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.