தாட்கோ திட்ட பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி

தாட்கோ திட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் சார்பில் 6 நாட்கள் விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.

Update: 2017-03-01 21:00 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட தாட்கோ திட்ட பயனாளிகளுக்கு இந்தியன் வங்கி சுய தொழில் பயிற்சி மையத்தில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழகம் சார்பில் 6 நாட்கள் விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இதனை மாவட்ட தாட்கோ மேலாளர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘பயனாளிகள் கடன் திட்டத்தில் கடன்பெற்று அதன் மூலம் வருமானத்தை பெருக்கி மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் வகையில் செயல்பட வேண்டும். மேலும் திட்ட அறிக்கையை தயார் செய்து நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பராமரித்து அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த முன்வர வேண்டும்’’ என்றார்.

வங்கி மேலாளர் சம்பத், பயிற்சி நிலைய இயக்குனர் அன்பழகன், பயிற்றுனர்கள் சித்ரா, ஆடிட்டர் சரவணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சி பெற்றவர்களுக்கு மாவட்ட தாட்கோ மேலாளர் ராமகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார். முடிவில் பயிற்றுனர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்