‘மரங்களை பாதுகாப்பது நமது கடமை’ மகிளா கோர்ட்டு நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோஷம் பேச்சு
‘மரங்களை பாதுகாப்பது நமது கடமை’ என்று மகிளா கோர்ட்டு நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோஷம் பேசினார்.
கன்னியாகுமரி,
மரக்கன்று நடும் திட்டம்
உத்ரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த விஸ்வயோக்யா அனுஸ்தன் பார்யவரன் அறக்கட்டளை சார்பில் நாடும் முழுவதும் மரக்கன்று நடும் திட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந் தேதி ஜம்மு– காஷ்மீரில் ரதயாத்திரையுடன் தொடங்கியது. இந்த ரதயாத்திரை இமாச்சலபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை, கோவா, பெங்களூரு, மதுரை, நெல்லை வழியாக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் நிறைவடைந்தது.
இதன் ஒரு பகுதியாக விவேகானந்தா கேந்திர பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவில் மாவட்ட மகிளா கோர்ட்டு நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோஷம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நம்முடைய இந்திய நாடு இயற்கை வளம் மிகுந்த நாடு. காடுகள், நதிகள், ஆறுகள் என வளம் பொருந்திய நாட்டில் இன்று பல்வேறு காரணங்களால் இயற்கையை அழித்து மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது.
மழைவளம் குறைகிறது
இதனால், மழைவளம் நாளுக்கு நாள் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மரத்தை ஒவ்வொருவரும் பேணி பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
இன்று நாம் சந்திக்கும் முக்கிய பிரச்சினை புவி வெப்பமயமாதல் ஆகும். உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த பிரச்சினையை நாம் கட்டுப்படுத்த மரம் வளர்ப்பது அவசியம். நமது தேவைக்காக ஒரு மரத்தை வெட்டினால், 5 மரங்களை நடவேண்டும். அப்போதுதான் இயற்கையை நாம் பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மகாமண்டலேஷ்வர், தேவிமாஸ்வாமி, வள்ளலார் பேரவை பத்மேந்திரா, கேந்திர பள்ளி முதல்வர் ஆபிரகாம்லிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.