பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்

பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்

Update: 2017-02-28 22:45 GMT
நெல்லை,


தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, 175 மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் போர்வை, வாளி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, பேராசிரியர் வளன் அரசு, முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம், முன்னாள் யூனியன் தலைவர் ஆ.க.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்