நெல்லையில் கல்லூரி மாணவ– மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

பசுமையான, தூய்மையான நெல்லை வேண்டும் என்று கூறி நெல்லையில் நடந்த பல்கலைக்கழக மாணவ–மாணவிகள் பேரணியை மாநகர போலீஸ் கமி‌ஷனர் திருஞானம் தொடங்கிவைத்தார்.

Update: 2017-02-28 22:45 GMT
நெல்லை,


விழிப்புணர்வு ஊர்வலம்


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலாண்மையியல் துறை சார்பில் “பசுமையான, தூய்மையான நெல்லை“ என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு ஊர்வலம் நெல்லையில் நேற்று நடந்தது.

ஊர்வலம் நெல்லை வண்ணார்பேட்டை சபாநாயகர் செல்லப்பாண்டியன் சிலை சந்திப்பில் இருந்து தொடங்கி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் வரை நடந்தது.

300 மாணவ– மாணவிகள்


விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துனைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கினார். நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் திருஞானம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் பேட்டை ம.தி.தா. இந்துக்கல்லூரி, பாளையங்கோட்டை சேவியர், ஜான்ஸ், சாரதா கல்லூரிகளின் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வ தொண்டர்கள் என 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மாணவ– மாணவிகள் பசுமையை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்