வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தடை விதிக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தடை விதிக்ககோரி நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லை,
ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நெல்லை தாலுகா செயலாளர் சுடலைராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில குழு உறுப்பினர் கருமலையான் கோரிக்கையை விளக்கி பேசினார்.
வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். நெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதை நிரந்தரமாக தடை விதிக்கவேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாயத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராஜ், ஸ்ரீராம், பொன்ராஜ், ராஜகுரு, நிர்வாகிகள் பேரின்பராஜ், குழந்தைவேலு, ஈசுவர மூர்த்தி, சங்கரவேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.