இயற்கை எரிவாயு திட்டத்திற்கு அமைக்கப்பட்ட ஆழ்துளை சோதனை குழாய் கிணறு அருகே திடீர் தீ
இயற்கை எரிவாயு திட்டத்திற்கு அமைக்கப்பட்ட ஆழ்துளை சோதனை குழாய் கிணறு அருகே திடீர் என்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வடகாடு,
எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதுடன், அப்பகுதியில் எரிவாயு திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை சோதனை குழாய் கிணறுகளை பார்வையிட்டு செல்கின்றனர்.
ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு திட்டத்திற்காக நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள புள்ளான்விடுதி, கல்லிக்கொல்லை, கருக்கா குறிச்சி, கோட்டைக்காடு, வாணக்கன்காடு ஆகிய இடங்களில பல ஆண்டுகளுக்கு முன்பு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் சோதனை நடத்தப்பட்டு ஆழ்துளை குழாய் கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆழ்துளை கிணறுகள் எல்லாம் மூடப்பட்டுள்ளன.
சோதனை குழாய்
இந்நிலையில் நெடுவாசலில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாணக்கன்காடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை சோதனை குழாய் கிணறு அருகே திடீரென நேற்று தீப்பற்றியதாக கிராமமக்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஆழ்துளை சோதனை குழாய் கிணற்றில் இருந்து வெளியேறும் எண்ணெய் கசிந்து அருகில் கழிவாக தேங்கி இருந்தது. அந்த எண்ணெய் கழிவு தான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
எரிவாயு திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்துளை சோதனை குழாய் கிணற்றை பார்வையிட வந்த யாராவது எண்ணெய் கழிவில் தீ வைத்து இருக்கலாம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.