பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2017-02-28 23:22 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட அவர் அவற்றின்மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 12 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் நிலுவைத்தொகை ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்திற்கான காசோலை, சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை ரூ.1,000-ற்கான காசோலைகள், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 3 பேருக்கு திருமண உதவித்தொகை, 3 பேருக்கு கல்வி உதவித்தொகை, 2 பேருக்கு வங்கிக்கடன் தள்ளுபடி என மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 179-க்கான காசோலை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் சார்பில் 2015-16-ம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்திற்கான காசோலை, புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் 6 பெண்களுக்கு மாவட்ட தொழில்மையம் மூலம் வங்கிக்கடனாக ரூ.12 லட்சத்து 49 ஆயிரத்து 690 மதிப்பில் ஆட்டோ ரிக்‌ஷா வாங்க காசோலையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மல்லிகா மற்றும் திரளான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்