கரையான்சாவடியில் புழுதியாக மாறிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
கரையான்சாவடியில் புழுதியாக மாறிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
பூந்தமல்லி,
கரையான்சாவடியில் புழுதியாக மாறிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சாலையை சீரமைக்க கோரிக்கை
பூந்தமல்லியில் இருந்து சென்னையை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்குவது டிரங்க் ரோடு. இந்தநிலையில் கரையான்சாவடி சிக்னலுக்கு முன்பு உள்ள சாலை மழைக்காலங்களில் மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறி விடும். இதனையடுத்து அவ்வப்போது நெடுஞ்சாலைத்துறையினர் அந்த பள்ளங்களில் கற்களை கொட்டி தற்காலிகமாக மூடிவிட்டு செல்வது வழக்கம். எனவே இங்கு சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள தார்சாலையை அகற்றி பேவர் பிளாக் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரம் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்கு தார் சாலை அகற்றப்பட்டு ஜல்லி, சிமெண்டு, மணல் கொட்டப்பட்டுள்ளது. மேலும் பேவர் பிளாக் சாலை அமைக்க பேவர் பிளாக் கற்களும் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் அவதி
இருப்பினும் இதுவரை அங்கு சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் புழுதியாக மாறி உள்ளது. சாலையின் அருகில் உள்ள ஓட்டல்கள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் தூசிகள் படிந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும் புழுதி அதிகமாக வருவதால் சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்கள் முகத்தை மூடியபடி நடந்து செல்கின்றனர். சாலையில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து இருப்பதாலும் புழுதி அதிக அளவில் பறப்பதாலும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.
எனவே உயிரிழப்பு ஏற்படும் முன்பு இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.