திருமயம் அருகே நெய்வாசலில் மாட்டு வண்டி பந்தயம் மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன
திருமயம் அருகே நெய்வாசலில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன.
திருமயம்,
மாட்டு வண்டி பந்தயம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி அவசர சட்டம் இயற்றப்பட்டதை தொடர்ந்து பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்று வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நெய்வாசல் கிராமத்தில் உள்ள திட்டாணிக்கருப்பர் கோவில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்த விழாக்குழுவினரும், பொது மக்களும் முடிவு செய்தனர். இதற்கான அனுமதி மாவட்ட நிர்வாகத்திடம் கோரப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை 6 மணி அளவில் நெய்வாசலில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பந்தயம், சிறிய மாட்டு வண்டி பந்தயம் என போட்டி இரண்டு பிரிவாக நடைபெற்றது. பந்தயத்தை முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, காரைக்குடி, மதுரை மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த 40 மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன.
பரிசு
இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை மதுரை மாவட்டம், சாத்தமங்கலத்தை சேர்ந்த சபரிராஜா மாடும், இரண்டாம் பரிசை சிவகங்கை மாவட்டம் விராமதி சந்திரன் மாடும், மூன்றாம் பரிசை புதுக்கோட்டை மாவட்டம் நெய்வாசல் அழகப்பன் மாடும், நான்காம் பரிசை சிவகங்கை மாவட்டம் விராமதி மோகன் மாடும் பிடித்தன.
சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கல்லணை ரவிச்சந்திரன் மாடும், இரண்டாம் பரிசை கொட்டகுடி வசந்த்பாரத் மாடும், மூன்றாம் பரிசை சிவகங்கை மாவட்டம் விராமதி மோகன் மாடும், நான்காம் பரிசை காரைக்குடி கருப்பண்ணன் சேர்வை மாடும், ஐந்தாம் பரிசை சிவகங்கை மாவட்டம் விராமதி சந்திரன் மாடும், ஆறாம் பரிசை புதுக்கோட்டை மாவட்டம் நெய்வாசல் மணிதேவர் மாடும், ஏழாம் பரிசை மதுரை மாவட்டம் அவனியாபுரம் மோகன் மாடும் பிடித்தது. பின்னர் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. மாட்டு வண்டி பந்தயத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.