நெல்லை மாவட்டத்தில் கோவில்களின் பாதுகாப்புப்பணிக்கு முன்னாள் படைவீரர்கள் தேர்வு கலெக்டர் கருணாகரன் தகவல்

நெல்லை மாவட்டத்தில் கோவில்களின் பாதுகாப்புப்பணிக்கு முன்னாள் படைவீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று கலெக்டர் கருணாகரன் தெரிவித்து உள்ளார்.

Update: 2017-02-21 20:00 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கோவில்களின் பாதுகாப்புப்பணிக்கு முன்னாள் படைவீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று கலெக்டர் கருணாகரன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கோவில்களின் பாதுகாப்புப்பணிக்கு

நெல்லை மாநகரத்தில் 32 கோவில்களிலும் நெல்லை மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் 79 கோயில்களிலும் இரவுப் பாதுகாப்புப் பணிக்காக முன்னாள்படைவீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

நெல்லை மாநகரம் மற்றும் நெல்லை மாவட்டத்தில் நெல்லை தாலுகா, தாழையூத்து, கங்கைகொண்டான், சிவந்திபட்டி, அம்பை, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி, கல்லிடைகுறிச்சி, வீரவநல்லூர், முக்கூடல், ஆலங்குளம், சுரண்டை, வீ.கே.புதூர், ஊத்துமலை, பாவூர்சத்திரம், தென்காசி, சாம்பவர்வடகரை, குற்றாலம், செங்கோட்டை, ஆய்குடி, அச்சன்புதூர், கடையநல்லூர், குருவிகுளம், திருவேங்கடம், வாசுதேவநல்லூர், வள்ளியூர், பணகுடி, மூலக்கரைபட்டி, மற்றும் களக்காடு போலீஸ் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட கோவில்களில் காலியாக உள்ள பாதுகாவலருக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

முன்னாள் படைவீரர்கள்

எனவே விருப்பமுள்ள திடகாத்திரமான 61 வயதிற்குட்பட்ட முன்னாள்படைவீரர்கள், தங்கள் அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவிலான போட்டோவுடன் அடுத்த மாதம் 17–ந் தேதிக்குள் பாளையங்கோட்டையில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்