விவசாயக்கடனை தள்ளுபடி செய்தால் மராட்டிய அரசுக்கு சிவசேனா முழு ஆதரவு அளிக்கும் உத்தவ் தாக்கரே பேச்சு

நாசிக் மாநகராட்சி தேர்தலையொட்டி ஹூதாத்மா கனீகர் மைதானத்தில் சிவசேனா சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:– விவசாயக்கடனை தள்ளுபடி செய்வோம் என்ற தவறான வாக்குறுதிகளை தெரிவித்து, உ

Update: 2017-02-17 22:03 GMT

நாசிக்,

நாசிக் மாநகராட்சி தேர்தலையொட்டி ஹூதாத்மா கனீகர் மைதானத்தில் சிவசேனா சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:–

விவசாயக்கடனை தள்ளுபடி செய்வோம் என்ற தவறான வாக்குறுதிகளை தெரிவித்து, உத்தர பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என்பதை பாரதீய ஜனதா உணர்ந்துவிட்டது. என்னுடைய மாநிலத்தில் (மராட்டியம்) அவர்கள் விவசாயக்கடனை தள்ளுபடி செய்தால், பா.ஜனதா அரசுக்கு சிவசேனா முழுமையான ஆதரவு அளிக்கும்.

குண்டர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு பா.ஜனதாவில் நுழைவதற்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வாய்ப்பு அளிக்கிறார். இதே நிலை நீடித்தால் வரும்காலத்தில் மந்திராலயா (தலைமை செயலகம்) ‘குண்டாலயா’ ஆக மாறிவிடும்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மேலும் செய்திகள்