திருப்போரூர் அருகே 3 வீடுகளில் 38 பவுன் நகை திருட்டு

திருப்போரூர் அருகே 3 வீடுகளில் 38 பவுன் நகை திருடப்பட்டது.

Update: 2017-02-17 19:55 GMT
திருப்போரூர்,

திருப்போரூர் அருகே 3 வீடுகளில் 38 பவுன் நகை திருடப்பட்டது.

நகை திருட்டு

திருப்போரூரை அடுத்த காயார் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய தம்பி கோதண்டபாணி. இருவரும் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் காலை அவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர். வீட்டுக்கான சாவியை வீட்டின் முன்பு மறைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பெருமாளும், கோதண்டபாணியும் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

அப்போது அவர்களுடைய வீடுகள் திறந்து கிடந்தன. வீட்டுக்குள் சென்று பார்த்த போது பெருமாள் வீட்டின் பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது.

போலீசார் விசாரணை

கோதண்டபாணி வீட்டில் இருந்த ஒரு பவுன் நகையும் திருடப்பட்டிருந்தது. ஏரிக்கரை தெருவில் உள்ள மணி என்பவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்கநகை மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது. இது குறித்து காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்