பிளாஸ்டிக் பையால் ஏற்பட்ட தகராறில் இனிப்புகடை ஊழியர் அடித்து கொலை ஆட்டோ டிரைவர் கைது

பிளாஸ்டிக் பையால் ஏற்பட்ட தகராறில் இனிப்புகடை ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் ஒருவர் கைதானார்.

Update: 2017-02-16 21:59 GMT

மும்பை,

பிளாஸ்டிக் பையால் ஏற்பட்ட தகராறில் இனிப்புகடை ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் ஒருவர் கைதானார்.

இனிப்பு கடை ஊழியர்

நவிமும்பை தலோஜா, தேவிச்சா பாடாவில் உள்ள ஒரு இனிப்பு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் புட்டாஜி ராய்கா (வயது35). சம்பவத்தன்று இந்த இனிப்பு கடைக்கு அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாருதி பெண்டே (32) என்பவர் வந்து மிட்டாய் வாங்கினார்.

அந்த மிட்டாய் பெட்டியை பிளாஸ்டிக் பையில் போட்டு புட்டாஜி ராய்கா கொடுத்தார். ஆனால் மேலும் ஒரு பிளாஸ்டிக் பை தரும்படி மாருதி பெண்டே கேட்டு இருக்கிறார்.

கைது

ஆனால் புட்டாஜி ராய்கா தர மறுத்துவிட்டார். இது மாருதி பெண்டேவுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் தலைக்கேறிய மாருதி பெண்டே, புட்டாஜி ராய்காவை சரமாரியாக அடித்து உதைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அடி தாங்காமல் சுருண்டு விழுந்த புட்டாஜி ராய்காயை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் 2 நாட்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் தொடர்பாக தலோஜா போலீசார் மாருதி பெண்டே மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்