அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்

தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதை வரவேற்று தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

Update: 2017-02-16 21:23 GMT
தர்மபுரி,

பதவியேற்பு

தமிழகத்தின் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி நேற்று பதவியேற்று கொண்டார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதை வரவேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தர்மபுரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

தர்மபுரியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, முன்னாள் நகர துணைசெயலாளர் பூக்கடை ரவி, கூட்டுறவு சங்க தலைவர் ராஜா, கட்சி நிர்வாகிகள் வடிவேல், அங்குராஜ், செந்தில்குமார் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர்.மன்றம்

இதேபோன்று தர்மபுரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் தர்மபுரி பெரியார் சிலை அருகில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், டான்சில்க் தலைவர் மணிவண்ணன், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் வேலாயுதம், நிர்வாகிகள் விமல்ராஜ், கோகுல், மணி மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி-மொரப்பூர்

பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கவுதமன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் சரவணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று மொரப்பூர், கம்பைநல்லூர் மற்றும் திப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். பென்னாகரம் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அரூர், பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

மேலும் செய்திகள்