திருச்சி மாவட்டத்தில் 128 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன கலெக்டர் தகவல்
திருச்சி மாவட்டத்தில் 128 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி கூறி உள்ளார்.
திருச்சி,
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நலத்திட்ட உதவிகள்
திருநங்கைகளின் வாழ்க்கை தரம் உயர்ந்திடும் வகையிலும், சமுதாயத்தில் மற்றவர்களுக்கு சரிநிகராக வாழ்வதற்கு தேவையான அனைத்து வகையான உதவிகளும் தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 218 திருநங்கைகள் உள்ளனர். அவர்களுக்கு திருநங்கைகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 128 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் 47 பேர் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள். அவர்களில் 12 திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 13 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையும், 5 பேருக்கு தையல் எந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமுதாயத்தில் திருநங்கைகளின் பொருளாதார முன்னேற்றம் உயர்ந்து சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஆடு வளர்ப்பு மையங்கள்
அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 60 திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டுகளையும், சுயஉதவிக் குழுக்களுக்கு 25 சதவீதம் மானியத்தில் கறவை மாடு வளர்த்து பால் உற்பத்தி செய்வதற்காக ரூ.10 லட்சத்து 50 ஆயிரமும், அழகு நிலையம் வைப்பதற்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரமும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 25 திருநங்கைகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் திருநங்கைகளுக்கென இரண்டு சுயஉதவிக்குழு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு சமூக நலத்துறையின் சார்பாக தொழிற்பயிற்சியும், அரசு மானியத்தில் வங்கிக்கடன் உதவியும் வழங்கி தற்போது பாத்திரக்கடை, பெட்டிக்கடை, பால்வியாபாரம், கறவை மாடு மற்றும் ஆடு வளர்ப்பு மையங்கள் அமைத்து சிறப்பாக வாழ்வதற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் திருநங்கைகள் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து, அவர்களும் சமூகத்தில் நல்மதிப்புடன் வாழ்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.