கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து சேலத்தில் சிவில் என்ஜினீயர்ஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
ஆர்ப்பாட்டம்
சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் சங்கம் சார்பில் கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவில் என்ஜினீயர்ஸ் சங்கத்தின் தலைவர் அரவிந்த்பாபு தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ராஜூ, பொருளாளர் சுபாஷ் உள்பட சிவில் என்ஜினீயர்ஸ் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்தும், மணல் செயற்கை விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், பத்திரப்பதிவை ஒழுங்குமுறைப்படுத்தி நடைமுறைப்படுத்தக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
பேட்டி
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் சங்கத்தின் தலைவர் அரவிந்த்பாபு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் இருந்து மணல் அதிகளவில் கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு கடத்தப்படுவதால் செயற்கை விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கட்டுமான பணிகள் 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மூட்டை சிமெண்டு ரூ.140–க்கு உற்பத்தி செய்யப்பட்டும், தற்போது ரூ.380–க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரும்பு கம்பி விலையும் அதிகரித்துள்ளது.
இதுதவிர பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் கட்டுமான ஹார்டுவேர்ஸ் பொருட்கள் 10 முதல் 20 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. டி.டி.சி.பி. அப்ரூவல் பெறாத மனை நிலங்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கிரயம் செய்யக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மனை நிலங்கள் பத்திரப்பதிவு நடைபெறாமல் ஏராளமான பணிகள் நிலுவையில் உள்ளன.
விரைவில் போராட்டம்
இதனால் தமிழகம் முழுவதும் கட்டுமான தொழிலில் உள்ள 3 முதல் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து கட்டுமான தொழிலாளர்களை திரட்டி விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.