பி.எஸ்.என்.எல். சார்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் தொடங்கியது

பி.எஸ்.என்.எல். சார்பில் இளைஞர், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.

Update: 2017-02-16 20:00 GMT

நெல்லை,

பி.எஸ்.என்.எல். சார்பில் இளைஞர், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.

வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

இந்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு ‘ஆப்டிகல் பைபர்‘ என்ற வேலைவாய்ப்பு பயிற்சியை அளித்து வருகிறது. இந்த பயிற்சி வண்ணார்பேட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்தில் நேற்று தொடங்கி, தொடர்ந்து 6 வாரம் நடைபெறுகிறது.

அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களால் நடத்தப்படும் இந்த பயிற்சியின் மூலம் ‘ஆப்டிகல் பைபர்‘ கேபிள் மற்றும் சிஸ்டம் பற்றி தெரிந்து கொள்வதோடு மட்டுமின்றி செய்முறை பயிற்சி மூலம் ‘ஆப்டிகல் பைபர்‘ தொழில்நுட்பம் சார்ந்த திறனையும் வளர்த்து கொள்ளலாம். பயிற்சி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு பயிற்சி நாளைக்கு ரூ.100 வீதம் பயணப்படி வழங்கப்படும்.

விருப்பமும், தகுதியும் உள்ள வேலை தேடும் இளைஞர்–இளம்பெண்கள் http://rgmttc.bsnl.co.in/jobportal என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மறுபடியும் பதிவு செய்ய தேவை இல்லை.

ஆதார் அட்டை

பயிற்சியில் சேர வருபவர்கள் அசல் சான்றிதழ்களோடு பதிவு செய்த விண்ணப்பத்தின் இரண்டு நகல், ஆதார் அட்டை இரண்டு நகல் கொண்டு வர வேண்டும். பயிற்சியில் சேர விருப்பம் உள்ள பதிவு செய்யாதவர்களும் மற்ற பயிற்சியில் பதிவு செய்து அந்த பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்களும் பயிற்சி பெற விரும்பினால் சான்றிதழ்களோடு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்திற்கு வந்து, அங்கு நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0462–2500976 என்ற எண்ணிலோ அல்லது agmcscebtvl@gmail.com என்ற இணையதள முகவரிலோ தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை பி.எஸ்.என்.எல். நெல்லை பொது மேலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்