குத்துச் சண்டை,ஜூடோ போட்டிகளில் தூத்துக்குடி பள்ளிக்கூட மாணவர்கள் சாதனை
மாநில அளவிலான குத்துச் சண்டை மற்றும் ஜூடோ போட்டிகளில், தூத்துக்குடி பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி,
மாநில அளவிலான குத்துச் சண்டை மற்றும் ஜூடோ போட்டிகளில், தூத்துக்குடி பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
குத்துச்சண்டை போட்டிபள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் நடந்தது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பள்ளிக்கூட மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவி வின்சி தங்க பதக்கமும், மாணவி ஜெல்சியா வெள்ளி பதக்கமும், ராதிகா, சரசுவதி தேவி, சுமதி, சந்தோஷ், பொன் கார்த்திகேயன் ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர்.
ஜூடோ போட்டிஇதே போல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாநில அளவில் நடந்த ஜூடோ போட்டியில் தூத்துக்குடியை சேர்ந்த பள்ளிக்கூட மாணவி செல்வலட்சுமி தங்க பதக்கமும், மாணவி மஞ்சு வெண்கல பதக்கமும் பெற்றனர்.
மேலும், மத்திய அரசால் கேலோ – இந்தியா விளையாட்டு கழகம் சார்பில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி மதுரையில் நடந்தது. இதில் தூத்துக்குடி மாணவி முத்து சுவிதா வெள்ளி பதக்கமும், மாணவி ராஜேசுவரி வெண்கல பதக்கமும் பெற்றனர்.
பாராட்டுவெற்றி பெற்ற மாணவ–மாணவிகளை, மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் வாழ்த்தினார். மாவட்ட குத்துச்சண்டை கழக செயலாளர் ஞானதுரை, தலைமை பயிற்சியாளர் ராஜலிங்கம், துணை பயிற்சியாளர்கள் சுப்புராஜ், ஸ்டீபன், சாய் அகாடமி பயிற்சியாளர் முத்துசங்கர குமார், ராஜோ பாக்ஸிங் கிளப் பயிற்சியாளர் ராஜேஷ், ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூட உடற்கல்வி பயிற்சி இயக்குனர் ஜாஸ்மின் ஆகியோர் பாராட்டினர்.
--–
படம் உண்டு...
குத்து சண்டை போட்டிகளில் சாதனை படைத்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினர் பாராட்டிய போது எடுத்தபடம்.