நெடுங்குணம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

நெடுங்குணம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2017-02-16 20:30 GMT

சேத்துப்பட்டு,

பெரணமல்லூர் ஒன்றியம் நெடுங்குணம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 2014–15 மற்றும் 2015–16–ம் ஆண்டில் ரூ.1½ கோடி மதிப்பில் ஏரி ஆழப்படுத்துதல், குளம் சீரமைத்தல், கசிவுநீர் குட்டை, சாலை அமைத்தல் ஆகிய திட்டத்தில் பயனாளிகளின் புகைப்படம், கையெழுத்து, பணம் பட்டுவாடா, வேலை செய்த நாள் போன்றவை குறித்து சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நெடுங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது.

மூத்த குடிமகன் நாகப்பன் தலைமை தாங்கினார். பெரணமல்லூர் ஒன்றிய ஆணையாளர் சவீதா முன்னிலை வகித்தார். பெரணமல்லூர் ஒன்றிய சமூக தணிக்கை அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார். இதில் ஊராட்சி வள அலுவலர்கள் காயத்ரி, சோனியா, மஞ்சுளா, விஜயலட்சுமி, சரண்யா ஆகியோர் வீடு, வீடாக சென்று செய்த தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்தனர்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அரசு வழங்கும் பசுமை வீடு, இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு, தனிநபர் கழிவறைகள் கட்டி தர வேண்டும் என 60 கோரிக்கை மனுக்கள் வழங்கினார்கள்.


மேலும் செய்திகள்