வங்கி காவலாளி சுட்டுக்கொலை: போலீஸ் தேடிய முக்கிய குற்றவாளி 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது துப்பாக்கி- 4 தோட்டாக்கள் பறிமுதல்
திருவேங்கடம் அருகே வங்கி காவலாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் தேடிய முக்கிய குற்றவாளி 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில்,
திருவேங்கடம் அருகே வங்கி காவலாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் தேடிய முக்கிய குற்றவாளி 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காவலாளி சுட்டுக்கொலை
நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள நடுவப்பட்டியை சேர்ந்த மாடசாமி மகன் ராமராஜ் (வயது 46). இவர் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு வங்கியில் பணியில் இருந்த போது கொள்ளை முயற்சி நடந்தது. அப்போது காவலாளி ராமராஜ் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். வங்கியில் நகைகள் எதுவும் கொள்ளை போகவில்லை.
இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த கொலை தொடர்பாக உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திரபால், ஜோன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
5 ஆண்டுகளுக்கு பிறகு கைது
மேலும் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா தே.கரிசல்குளத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் ஜானகி ராமன் (36) என்பவரை போலீசார் தேடி வந்தனர். சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோலையப்பன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது திருவேங்கடம் அருகே ஆவுடையாள்புரம் பஸ்நிறுத்தத்தில் நின்ற ஜானகிராமனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வங்கி காவலாளி கொலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஜானகிராமன் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.