தானே மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா- தேசியவாத காங்கிரஸ் இடையே ரகசிய கூட்டணி சிவசேனா மந்திரி குற்றச்சாட்டு

தானே மாநகராட்சியில் அதிகாரத்தில் இருக்கும் சிவசேனாவை வெளியேற்ற இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கும் தேசியவாத காங்கிரசுக்கும் இடையே அறிவிக்கப்படாத, ரகசிய கூட்டணி ஏற்பட்டிருக்கிறது.

Update: 2017-02-15 22:45 GMT
தானே,

தானே மாநகராட்சி தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், அந்த மாவட்ட சிவசேனா தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தானே மாநகராட்சியில் அதிகாரத்தில் இருக்கும் சிவசேனாவை வெளியேற்ற இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கும் தேசியவாத காங்கிரசுக்கும் இடையே அறிவிக்கப்படாத, ரகசிய கூட்டணி ஏற்பட்டிருக்கிறது. சிவசேனாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் கருவியாக தேசியவாத காங்கிரசை பா.ஜனதா பயன்படுத்துகிறது.

தானேயில் சிவசேனா மேற்கொண்ட மெட்ரோ ரெயில், மேம்பாலங்கள், நீர்வழிப் போக்குவரத்து உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளுக்கான புகழை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எடுத்து கொள்கிறார். ஆனால், இந்த திட்டங்கள் அனைத்தும் 2014-ம் ஆண்டில் பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்றதற்கு முன்னரே ஒப்புதல் அளிக்கப்பட்டவை என்பது பொதுமக்களுக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். 

மேலும் செய்திகள்